அகிம்சை மறந்துவிட்டோம்!
மதங்களின் பெயரால்
மனிதம் துறந்துவிட்டோம்!
எத்தனை வருடங்கள்
ரத்தம் சிந்த யுத்தேசம்?
எந்த மதமும்
ஆயுதத்தை ஆதரிக்கவில்லை!
அன்பைத்தான் யாசிக்கிறது.
எந்தத் தத்துவத்திலும்
ரத்தத்துளிகள் இல்லை!
வேற்றுமையும் வஞ்சகமும்
கயமையும் கொலைவெறியும்
வேதங்களிலும் பேதங்கள்
தேடுபவர்களிடம் உண்டு!
மதங்களால் மனம்பிரிக்க
அனுமதியோம்!
தீர்ப்புகளுக்காகத் தீ வையோம்!
ஆகவே இந்து முஸ்லீம் நண்பர்களே!
மதங்கள் வாழ்க! மனிதரும் வாழ்க!
ஆண்டவனும் வாழ்க! அமைதி வாழ்க!