கொன்றுவிடாதே....


கடலோடு சிறு கடிதம்
கரையோடு
சிறு கவிதை
நினைவோடு
சில நிஜங்கள் - வானின்
நீலத்தோடு
சில நிமிடங்கள்
மனதோடு
கொஞ்சம் மௌனம் - உன்னை
மறக்கமுடியாமல்
என் காலங்கள்

விழியோடு
எதிர்பார்புகள்
உன்
பதிலுக்கான நேரங்கள்
காகிதத்தில்
என் கண்ணீர் துளிகள்
கசிந்துபோன
பேனா மை
காலங்கள்
அழிவதில்லை - என் மனதிலுள்ள
காதலும்
அழிவதில்லை

காலமெலாம்
காத்திருப்பேன் - உனக்காக
உன்
மௌனத்தினால் எனை கொன்றுவிடாதே....