நமது நட்பின் அடுத்த கட்டம் என்ன

அடுத்தது என்ன தோழியே ?
என் உயிர் தோழியே,
நமது நட்பின் அடுத்த கட்டம் தான் என்ன ?
என்னால் இனியும் தாமதிக்க முடியாது,
இதோ இப்பொழுதே ஒத்துக்கொள்கிறேன் ,
எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ...!
எனது நெஞ்சில் சாய்ந்து அழுத நாட்களை,
என் சட்டை பட்டனில் சிக்கிய,
உன் குந்தலின் பொக்கிஷ செதறல்களுக்கு தெரியும்,
நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
உனது இமைக்குளங்கள் நிரம்பும் முன் ,
அணையாய் தடுத்த எனது கைக்குட்டைக்கு தெரியும்,
நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
என்றேனும் , எவர்கேனும் அல்ல எதற்கேனும் உதவி வேண்டுமானால் ,
முதலாய் உன் மனதில் மின்சார மின்னலாய்,
வந்து செல்லும் ஆடவன் நான்தானே?
யோசித்து சொல்லடி என்னுயிர் தோழியே,
நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
இனி எவரிடமும் கூறிவிடாதே , நான் உன் தோழன் என்று !
ஆனால் இவனே என்னவனென்று,
அறிமுகப்படுத்த மாட்டாயா கண்ணே?
இன்னுமா புரியவில்லை என்னாருயிர் தோழியே?
நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
உன் கைபேசிக்கு தெரியும் ,
ஒவ்வொரு இரவிலும் நித்திரை முன்,
நீ கடைசியாய் பேசும் ஆடவன் நானென்று ,
காலையில் என் படுக்கையறை கடிகாரத்துடன்,
போட்டி போட்டு எழுப்பிவிடும் முதலவள் நீயே என்று !
இன்னுமா தெரியவில்லை தோழியே,
நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
இதோ இப்பொழுதே ஒத்துக்கொள்கிறேன் ,
எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ...!
நானும் உன்னை விரும்புகிறேன் !
உனது காட்டில் கம்பீரமாய் உலாவரும்,
ஒற்றை சிங்கமென நான் இருப்பேன் !
உனது காவலனாய் இருப்பேன் !
என்றும் இதே நட்புடனும் இருப்பேன் !
உனது காதலனாய் இருப்பேன் பெண்ணே !
பெருமையுடன் கூறுவாய் பெண்ணே,
இப்புவுலகில் உன்னைவிட அதிர்ஷ்டசாலி எவரும் இல்லயென்ன !
இன்னுமா அறியவில்லை ?
நமது நட்பின் அடுத்த கட்டம் என்னவென்று !
என்னால் இனியும் தாமதிக்க முடியாது,
இதோ இப்பொழுதே ஒத்துக்கொள்கிறேன் ,
எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன் ...
நீ இல்லாமல் நான் இல்லையென்று